வந்தாரை வாழவைத்த சென்னையின் நிலைமை இன்று மோசமான நிலையை சந்தித்து நிற்கிறது.
இந்த காரோண என்ற நோய் தொற்று அனைவரையும் பதித்து உள்ளது முக்கியமாக சென்னை மிக அதிகமாக பாதித்துள்ளது, இன்று வரை தமிழ்நாட்டில் காரோண நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50, 193 இதில் குணமடைந்தோர் 27, 264 மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை 576.
இந்த காரோண என்ற நோயால் பாதிக்க பட்ட மக்களை விட நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நிம்மதியை இழந்து உணவிற்கு கஷ்டப்படும் அளவிற்கு தள்ள பட்டு உள்ளனர்.
கடந்த திங்கள் அன்று நமது முதல்வர் அறிவிப்பின் படி இன்று (19/06/2020) to (01/07/2020) வரை கடுமையான ஊரடங்கு தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் அமல் படுத்தபட்டு உள்ளது
1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.செங்கல்பட்டு
4.திருவள்ளூர்
இதனால் அச்சம் அடைந்த சென்னையை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தங்கள் சொந்த ஊரான தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கினர் இதன் காரணமாக செங்கல்பட்டு டோல்கேட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது தமிழ்நாடு காவல்துறை.
பல இன்னல்களை கடந்து சென்னை மறுபடியும் எழும் என்று சென்னையை பிறப்பிடமாக கொண்ட மக்கள் தெரிவித்து உள்ளனர்.
அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
ஒன்றாக இணைத்து கொரோனவை ஒழிப்போம்!!!


1 comments:
Click here for commentsதனித்து இருப்போம் கொரனாவையைஒழிப்போம்
ConversionConversion EmoticonEmoticon